சென்னை அருகே மதுக்கடையை சூறையாடிய பொதுமக்கள்!

சென்னை:மப்பேட்டில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மக்கள் அடித்து உதைத்து சூறையாடினர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த மப்பேடு பகுதியில் புதிதாக அரசு மதுக்கடை திறக்கப்பட்டது.

மதுக்கடை திறந்தால், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படும்.
கூலித்தொழிலாளிகள் வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகும் நிலை உருவாகும்.
எனவே, கடைதிறக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
எதிர்ப்பையும் மீறி அங்கு மதுக்கடை இன்று திறக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், இளைஞர்கள் திரண்டு மதுக்கடையை முற்றுகையிட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்று தோற்றனர்.
மதுக்கடைக்குள் சென்ற மக்கள் அதனை சூறையாடினர். இதனால் அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here