யோகா செய்வதால் மூட்டுகளுக்கு ஆபத்து!

மும்பை: யோகா செய்வது உடலுக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார் பிரபல மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அசோக்ராஜகோபால்.
50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டுமாற்று அறுவைசிகிச்சைகள் செய்தவர் இவர்.இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த யோகா மாஸ்டர்களும் இவரிடம் மூட்டுஅறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர்.
யோகா குறித்து இவர் கூறியுள்ளதாவது:யோகாவை பலவந்தமாக தினந்தோறும் செய்துவருவோர் எலும்புகள், மூட்டுகள் பாதிக்கப்படுகின்றன.
யோகாவில் எல்லா பயிற்சியும் எல்லோருக்கும் ஏற்றதல்ல.
உதாரணமாக வஜ்ராசனம். இதனை தற்போதைய மாஸ்டர்கள் பல நிலைகளில் புதிய ஆசனமாக கற்றுத்தருகின்றனர். இதனால் மூட்டுகள் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

உடலை நீண்டநேரம் அசவுகரியமான நிலையில் வைத்திருப்பதுடன் மூச்சுப்பயிற்சியையும் சேர்த்து செய்வதால் உடல் பிரச்சனையைத்தான் சந்திக்கிறது.
இதனால் பல யோகா குருக்கள் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர்.எனவே உடலுக்கு பிரச்சனை தருகிற எந்தவொரு உடற்பயிற்சியையும் தவிர்க்கவேண்டும்.
இவ்வாறு டாக்டர் அசோக் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here