தனிக்கட்சி தொடங்குகிறார் ஆர்.கே.பாலாஜி! டுவிட்டரில் கொடியை அறிமுகப்படுத்தினார்!!

சென்னை: ரேடியோ ஜாக்கியான ஆர்ஜே பாலாஜி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வரும் பாலாஜி டுவிட்டரிலும் தனது சமூக கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவருகிறார்.காவிரி விவகார போராட்டதின் போது சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டி வர்ணனையாளர் பணியிலிருந்து விலகினார். சமூக நலனில் அக்கரையுடன் கருத்து தெரிவித்து வரும் பாலாஜி மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி அரசியலில் களமிறங்க போவதாக சுவர் விளம்பரங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ஆர்ஜே பாலாஜி தனது டிவிட்டர் முகப்புப்படமாக ஒரு கொடியினை பதிவு செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடி சிவப்பு, கருப்பு, பச்சை நிறத்திலும், அதைச் சுற்றி மஞ்சள் நிறமும் நிரப்பப்பட்டு கொடியின் மையத்தில் பசுவின் படம் இடம்பெற்றுள்ளது.தனது டுவிட்டர் பக்கத்தில் முகப்பு படமாகவும், கொடியை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசியலுக்கு வரும் எண்ணத்தில் அவரின் கட்சிக்கொடியாக இருக்குமோ என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here