பால் வாங்கும் நேரத்தில் வீட்டில் கொள்ளையடித்த பலே திருடர்கள்!

நாகர்கோவில்: நாகர் கோவில் வடிவீஸ்வரன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்பிள்ளை வக்கீல் குமஸ்தாவாக பணியாற்றி வருகிறார்.காலை அவரது வீட்டில் மனைவி தங்கம், இரண்டு பிள்ளைகளுடன் தனி அறையில் துங்கிக் கொண்டிருந்தனர். ஆறுமுகத்தின் தாய் மீனாட்சி பால் வாங்கிவர கடைக்குச் சென்றார்.வீட்டின் முன் பக்க கதவை லேசாக சாத்திவிட்டு சென்றுள்ளார். இதை நோட்டமிட்டிருந்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 40 சவரன் நகை, ஒரு லட்சம் பணம் கொள்யைடித்துச் சென்றனர்.பால் வாங்கிவிட்டு சிறிது நேரத்திற்குள் வீட்டிற்கு வருவதற்குள் பீரோ உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here