கோவில் விழாவில் மோதல்! போலீசாருக்கு அரிவாள் வெட்டு!!

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி சிவந்திலிங்கபுரம் என்ற இடத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் பங்கேற்று இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த துறையூர் காவல் நிலைய காவலர்கள் உமர் மற்றும் மோகன் இருதரப்பு மோதலை தடுக்கச் சென்றனர்.மோதலில் ஈடுபட்டவர்கள் அரிவாளால் தாக்கியதில் உமர் மற்றும் மோகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.தலையில் அரிவாள் வெட்டுப்பட்ட காவலர் மோகன் கவலைக்கிடமான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here