நான் சொன்னது மனோரமா ஆச்சி! அமைச்சர் அடித்தார் அந்தர்பல்டி!!

மதுரை: காலா திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நதிகள் இணைப்பு தனது லட்சியம் என ரஜினிகாந்த் பேசினார். ரஜினியின் பேச்சுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்தார்.நதிகள் இணைப்பை பயன்படுத்தி காரைக்குடி ஆச்சியைதான் பிடிக்க முடியும்,  தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.
பாஜக தலைவர் ஹெச்.ராஜா, அமைச்சர் மன்னிப்புகேட்கவேண்டும் என்று வலியுறுத்தினார். நகரத்தார் சமுதாயம் தனியாக இல்லை. ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் முக்கிய அங்கம் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.ரஜினி மீதான விமர்சனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அமைச்சர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.மனோரமா ஆச்சியை மனதில்வைத்துக்கொண்டுதான் அவ்வாறு தான் பேசியதாக தெரிவித்தார்.நகரத்தார் சமூகத்தை நான் மிகவும் மதிக்க கூடியவன். அவர்களுடன் நெருங்கி பழக கூடியவன். நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் அளித்தார். நடிகை மனோரமா தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் பிறந்தவர். தாயுடன் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் வளர்ந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here