ராமாயண காலத்தில் ஹைடெக் வசதி! பஞ்சாப் ஆளுநர் சர்ச்சை பேச்சு!!

சண்டிகர்: தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு மொகாலியில் நடந்த விழாவில் பஞ்சாப் கவர்னர் விபி சிங்பத்நூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடலில் ராமர் கட்டிய சேது பாலம் ராமாயண காலத்திலேயே இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்ததற்கான சான்றாகும்.அனுமன், லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை கொண்டு வந்ததும் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது. அந்த காலத்திலேயே அதி நவீன ஆயுதங்கள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.இன்று இந்தியா அதிநவீன நாடாக திகழ்கிறது. அன்றே நாம் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது இதிகாசங்கள் வாயிலாக தெரியவருகிறது என்றார்.ஆளுநரின் இப்பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட், தொலைத்தொடர்பு வசதிகள் இருந்ததாக கடந்த சில வாரங்களுக்கு
முன் திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here