மன அழுத்தத்தில் தங்கல் பட நடிகை!

மும்பை: மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்ததாக தங்கல் பட நடிகை தெரிவித்துள்ளார். தங்கல் படத்தில் அமீர்கானின் மகளாக சிறுமி சைய்ரா வசிம் நடித்திருந்தார்.அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில வருடங்களாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் தனக்கு மிகுந்த அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.அதற்காக மருந்துகள் எடுத்துக் கொண்டேன். தன்னிடம் எதுவும் தவறாக இல்லை என்பதை நம்ப எல்லா நேரங்களிலும் முயற்சி செய்தேன். ஓய்வு இல்லாமல், பிரம்மை பிடித்தவள் போலவும், உடல்வலி, தற்கொலை எண்ணம் போன்றவை அந்தக் கட்டத்தில் இருந்ததாக கூறியுள்ளார்.ரமலான் மாதத்தை எதிர்ப் பார்த்து காத்திருக்கிறேன். அது முதல் எனக்குச் சிறப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here