கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? எக்சிட் போல் முழு விபரம்!!

பெங்களூர்:கர்நாடக பேரவை தேர்தல் அமைதியாக நடந்துமுடிந்தது. 222தொகுதிகளில் 66.84%வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெங்களூர் வடக்கு மற்றும் பெங்களூர் தொகுதிகளில் குறைந்தபட்சமாக 49%ஓட்டுகளும், அதிகபட்சமாக பெங்களூரை அடுத்த ராமநகரம் தொகுதியில் 80% ஓட்டுக்களும் பதிவாகி உள்ளன.                                                                        தேர்தல் நாளன்று எடுக்கப்பட்ட எக்சிட் வாக்கெடுப்பில் தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

தேர்தல் ஆணையர் பிரஜேஷ்காலப்பா அளித்த பேட்டியில், பெங்களூர் ஆர்.எம்.வி.2 பகுதியில் வாக்குச்சாவடியில் ஒரு மெஷினில் பாஜகவுக்கு மட்டுமே வாக்குகள் விழுவதாக கூறப்பட்டது.அதிகாரிகள் மெஷினை சரிபார்த்து அதனை தவறு என்று நிரூபித்தனர்.
ஹெப்பால் தொகுதியில் 2ம் எண் வாக்குச்சாவடியில் மே.14ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here