ரூ.300க்காக ஹால்டிக்கெட் மறுப்பு! கல்லூரி மாணவருக்கு மாரடைப்பு!!

சாத்னா:கல்லூரி நிர்வாகம் ஹால் டிக்கெட் தர மறுத்ததால் மாணவருக்கு மாரடைப்பு வந்து இறந்தார். மத்தியப்பிரதேச மாநிலம் சாத்னா நகரில் ராமகிருஷ்ணா கல்லூரி இயங்கி வருகிறது.அங்கு மோகன்லால் என்பவர் பிசிஏ படித்துவந்தார். கல்லூரி கட்டணமாக ரூ.27ஆயிரத்து 500 அவர் கட்டியிருந்தார்.ரூ.300 அவர் கூடுதலாக அவர் கட்டவேண்டும் என்று ஆசிரியர் கூறினார். பின்னர் ஆசிரியரும், மாணவரும் அதனை மறந்துவிட்டனர். இதற்குள் தேர்வுகள் ஆரம்பிக்க மோகன்லாலுடன் படிக்கும் அனைவருக்கும் ஹால்டிக்கெட் தரப்பட்டது.ரூ.300 கட்டியபின்னர் மோகன்லாலுக்கு ஹால்டிக்கெட் தருவதாக ஆசிரியர் கூறினார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மோகன்லாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர் இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here