பற்கள் உடைய அரியவகை மீன்! அமெரிக்காவில் சிக்கியது!!

அமெரிக்கா:  நீர்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துவருபவர் பமீலா. இவரது கணவர் ஹல்ப்ரூக். இருவரும் பொழுதுபோக்க கார்லஸ்டோன் துறைமுகப்பகுதி சென்றனர்.அங்கு சிறிய படகில் சென்று மீன் பிடிக்க தொடங்கினர். அவர்கள் தூண்டிலில் ஆட்டுத்தலை மீன் எனப்படும் அரியவகை மீன் சிக்கியது.கடலில் வளரும் தாவரங்களின் தண்டு, சிப்பி ஆகியவற்றை தங்கள் பற்களால் அரைத்து இந்த மீன்கள் சாப்பிடும்.பற்கள் தாடைகள் போன்று முன்னும்பின்னும் அசையும். மீன்களுக்கு பற்கள் முளைக்க தொடங்கி ஒருவருடம் வரையில் முழுமையாக வளரும். அவற்றுக்கு விழுந்து முளைக்கும் பால் பற்கள் கிடையாது.இம்மீன்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப பற்களின் வடிவமும், எண்ணிக்கையும் அமைகிறது.

அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்பகுதி, வளைகுடா கடல்பகுதிகளில் இம்மீன்கள் அதிகளவில் வசித்துவருகின்றன. இவற்றின் கறி சற்று வெண்மையாகவும், வாசமின்றியும், ருசியாகவும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here