காதில் சிக்கியது காட்டன்பட்! 2ஆண்டுக்குப்பின் அகற்றம்!!

லண்டன்:வாலிபர் காதில் இரண்டு ஆண்டுகளாக சிக்கியிருந்த காட்டன் பட் ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது. ஓட்பி நகரை சேர்ந்தவர் எட்வர்ட். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விடுமுறை நாளில் காதை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.அப்போது காட்டன் பட் காதில் சிக்கியது. உடனடியாக டாக்டரை அணுகினார்.
பஞ்சுப்பகுதி காதில் உள்ள டிரம் பகுதியில் அழுத்திக்கொண்டிருந்தது. அதனால், அதனை எடுக்கும்போது டிரம் சேதமடைய வாய்ப்புள்ளது.எனவே, அப்படியே விட்டுவிடலாம் என்று பரிந்துரை செய்தனர். 2ஆண்டுகளாக காதில் சிக்கிய ’காட்டன் பட்’டுடன் வாழ்ந்துவந்தார் எட்வர்ட். ஓட்பி நகரில் பிரபல ஒலியியல் நிபுணர் நீல் ரைததா-வை சந்தித்து ஆலோசனை கேட்டார். அவர் எளிய ஆபரேசன் மூலம் எட்வர்ட் காதில் சிக்கிய பஞ்சை எடுத்துவிட்டார்.எட்வர்ட் உடல் ஆரோக்கியமாக இருந்ததால் அவர் காதின் டிரம் பகுதி பாதிக்கப்படவில்லை. இல்லாவிட்டால், அவர் காதுகேட்கும் திறனையே இழந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, காதை சுத்தம் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எட்வர்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here