கர்நாடகா சட்டபேரவை தேர்தல்! மணக்கோலத்தில் வாக்களித்த பெண்கள்!

பெங்களூர்: கர்நாடக பேரவை தேர்தலில் திருமணக்கோலத்தில் வந்து பெண்கள் வாக்களித்தனர்.
கர்நாடகாவில் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
மதியம் ஒரு மணி நிலவரப்படி 37% வாக்குகள் பதிவாகி உள்ளன.
தேர்தலின்போது சுவாராஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன.

குடகுமாவட்டம் மடிகேரி நகரில் திருமணக்கோலத்தில் ஒரு பெண் வாக்களிக்க வந்தார்.
ஸ்மிதா என்ற அப்பெண் தனது தாயாருடன் வாக்களிக்கவந்தார்.
வாக்களித்து முடித்ததும் அவர் திருமண மண்டபத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.  அங்கே வாக்களித்துவிட்டு வந்திருந்த பிரவீனுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

இதேபோன்று, மங்களூரில் பொந்தல் செயிண்ட் லாரன்ஸ் நடுநிலைப்பள்ளியில் முதல் நபராக திருமணக்கோலத்தில் ஒரு பெண் வாக்களிக்க வந்தார்.
மரியா பெர்னாண்டஸ் தனது முதல் வாக்கை பதிவுசெய்துவிட்டு திருமணத்துக்கு கிளம்பிச்சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here