வாக்காளர்களுக்கு மசாலாதோசை, காபி! பெங்களூர் ஓட்டலில் இலவசம்!

பெங்களூர்: கர்நாடகா பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலில் நகரில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாகவே உள்ளது.
எனவே, வாக்குப்பதிவை அதிகரிக்கும் பொருட்டு இலவச உணவு வழங்குவதாக தனியார் ஓட்டல் அறிவித்துள்ளது.


பெங்களூரில் 15 இடங்களில் வாசுதேவ் அடிகா ஓட்டல் இயங்கி வருகிறது.
அதன் உரிமையாளர் இதுகுறித்து கூறுகையில், முதல் முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலைக் காட்டினால், மசால் தோசையும் காபியும் இலவசமாக வழங்கப்படும்.


மற்ற வாக்காளர்களுக்கு காபி மட்டும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டம் குறித்து அவர் கூறுகையில்,
இளைஞர்கள் வாக்களிப்பதனால் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் மாற்ற முடியும்.

இந்த நம்பிக்கையை அவர்களிடம் வரவழைக்க வேண்டும்.
இந்த சிறிய முயற்சி அவர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும்.
இவ்வாறு வாசுதேவ் அடிகா உரிமையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here