400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத கிராமம்!

ராஜ்கர்: மத்திய பிரதேசத்தில், ராஜ்கர் மாவட்டத்தில் சன்கா ஷ்யாம் ஜி கிராமத்தில் 400 ஆண்டுகளாக பிரசவம்  நடந்ததில்லை.16ம் நுாற்றாண்டில் இக்கிராமத்தில் கோவில் கட்டுமானப் பணி நடந்தது பெண் ஒருவர் அரவைக் கல்லில் மாவு அரைத்து கொண்டிருந்த போது எழுந்த சத்தத்தில் கட்டுமானப் பணி பாதிப்படைந்ததாகவும் இதனால் கிராமப் பெண்கள் யாரும் குழந்தை பெறக் கூடாது என சுவாமி சாபம் கொடுத்ததாக கூறப்படுகிறது.அன்று முதல் இன்று வரை 400 ஆண்டுகளாக கிராமத்தில் பிரசவம் நடந்ததில்லை. பெண்ணுக்கு பிரசவம் நடந்தால் பிறக்கும் குழந்தை ஊனமாகவோ அல்லது பிறந்த சிலநிமிடங்களிலேயே இறந்து விடும். சில நேரங்களில், தாயும், சேயும் கூட
இறந்து விடுவார்கள்.திடீரென கர்ப்பிணிகளுக்கு பிரசவலி ஏற்பட்டால் கிராமத்திற்கு வெளியே பிரசவம்
பார்ப்பதற்கென தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக நரேந்திர குர்ஜார் என்ற கிராம வாசி தெவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here