Connect with us

Sports

விளையாட்டு நடிப்பு இல்லை! ப்ரீத்தி ஜிந்தாவுக்கு சேவாக் பதிலடி!!

Published

on

மும்பை: ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு ஏற்பட்ட தோல்வியால் நடிகை ப்ரீத்திஜிந்தாவுக்கும், அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக்குக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த லீக் போட்டியில் அணிக்கு ஏற்பட்ட தோல்வி தொடர்பாக சேவாக்குடன் விவாதித்துள்ளார்.அது இருவருக்கும் இடையே காரசார மோதலாக வெடித்துள்ளது.


அன்றைய போட்டியில் கிங்ஸ்லெவன் அணி போராடவே இல்லை என்று சேவாக்கிடம் வெடித்துள்ளார் ப்ரீத்தி.மேலும், அஸ்வினை 3ம் நிலையில் உங்களை களமிறக்க சொன்னது யார் என்றும் சண்டையிட்டுள்ளார். அதற்கு பதிலடியாக, விளையாட்டு என்பது விளையாட்டில்லை, நடிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார் சேவாக்.

தனது விஷயத்தில் ப்ரீத்தி ஒதுங்கியிருக்கவேண்டும் என்றும் அணி நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இப்பிரச்சனையில் இருதரப்பையும் மற்ற நிர்வாகிகள் சமாதானப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ப்ரீத்திஜிந்தா கூறுகையில், வீருவுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் ஊதி பெரிதாக்கப்படுகிறது. நான் வில்லியாகியுள்ளேன். என்னே ஒரு ஆச்சர்யம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator