பத்து நிமிட நட்பு! கவர்னர் உரையை தமிழில் மொழிபெயர்த்த முதல்வர்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் கம்பன் விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் கிரண்பேடி ஆங்கிலத்தில் பேசவா தமிழில் பேசவா என கேள்வி எழுப்பினார்.இதற்கிடையே கவர்னரின் ஆங்கில உரையை மொழிபெயர்க்க கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் எனக்கு தெரிந்த ஆங்கில மொழிப்புலமையோடு தமிழில் மொழிபெயர்க்கிறேன். பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள் என கூறினார்.
அப்போது கவர்னர் கிரண்பேடி குறுக்கிட்டு முதல் அமைச்சர் நாராயணசாமி எனது உரையை மொழி பெயர்க்கட்டும் என கேட்டு கொண்டார். மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்க்க முன்வந்தார். இந்த மொழிபெயர்பின் போது எனது பேச்சைத்தான் அவர் மொழி பெயர்க்கிறாரா என தெரியாது.
10 நிமிடத்திற்கு நான் முதல் அமைச்சரை நம்புகிறேன் என கூறிய கிரண்பேடி தற்காலிகமாக நாம் நண்பர்களாக இருக்கலாம் என நாராயணசாமியுடன் கை குலுக்கி விட்டு இந்த நட்பு காலம் முழுவதும் தொடர விரும்புவதாக மைக்கில் கூறி தனது உரையை தொடங்கினார்.
கவர்னரின் ஆங்கில உரையை முதல்வர் நாராயணசாமி தமிழில் மொழி பெயர்த்தார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்த நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார். முதல்வர் நாராயணசாமியின் ஆட்சி அதிகாரத்தில் கவர்னர் கிரன்பேடி தலையீட்டால் இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here