கழிவறைக்காக தினமும் 4கி.மீ. நடக்கும் மாணவிகள்!

தாமோ : நாடெங்கும் தூய்மை பாரதம் திட்டத்தில் சுத்தமும், சுகாதாரமும் பேணப்பட்டு கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவிகள் தினமும், 4 கி.மீ., நடந்து சென்று கழிவறையை பயன்படுத்தவேண்டிய நிலை மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது.மத்திய பிரதேசத்தில், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
தாமோ மாவட்டத்தில், விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவியர் இதனால் கடும் அவதியுறுகின்றனர்.
கழிப்பிட வசதிக்காக ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் துணையுடன், கையில் வாளியுடன், தினமும், 4 கி.மீ., தொலைவு நடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து, விடுதி காப்பாளர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கம்.
அப்போது, விடுதிக்கு லாரி தண்ணீர் வினியோகிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கலெக்டரிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here