ஈசிஜி, பிபி விபரம் தெரிந்துகொள்ள வாட்ச்!

மும்பை: உடலின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள உதவும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாக உள்ளது. இந்தியாவை சேர்ந்த நிறுவனமான ஸ்மார்ட்ரான் டி-பேண்ட் என்ற வாட்சை தயாரித்துள்ளது.ஒரு இஞ்சுக்கும் சற்றுக்குறைவான ஓலெட் டிஸ்ப்ளே, 4எம்பி ராம் இந்த வாட்சில் உள்ளது.100எம்.ஏ.ஹெச். திறனுடைய பேட்டரியில் இயங்கும் இந்த வாட்ச் 2நாட்கள் வரை சார்ஜ் தாக்குப்பிடிக்கும். தண்ணீர், தூசு புகாமல் பாதுகாப்பு அம்சங்களுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த வாட்சை டி ஹெல்த் என்ற ஆப் வாயிலாக இயக்கலாம். இதயத்துடிப்பு, ஈசிஜி, பிபி அளவு ஆகியவற்றை இதன்மூலம் எளிதாக காணலாம். டிபேண்ட் விலை ரூ.4,999. மே.13ம் தேதி முதல் ப்ளிப்கார்ட்டின் விற்பனைக்கு கிடைக்கும்.அறிமுக சலுகையாக டி.பேண்ட் லெதர் ஸ்ட்ராப் அளிக்கப்படும். பின்னர் சிலிகானில் ஆன ஸ்ட்ராப்புடன் டிபேண்ட் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here