எல்லை கடந்துவரும் முட்டாள்தனம்! முதல்வரை சாடும் எதிர்க்கட்சிகள்!!

திரிபுரா: ரபிந்திரநாத் தாகூர் நோபல் பரிசை திரும்ப அளித்துவிட்டார் என்று சர்ச்சையை உருவாக்கியுள்ளார் திரிபுரா முதல்வர். திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடித்து பிப்லப் குமார் தேவ் இளையவயதிலேயே முதல்வராகி உள்ளார்.சர்ச்சைக்கருத்துக்களை தெரிவிப்பதில் இவர் முன்னோடியாக உள்ளார். மகாபாரத காலத்திலேயே இணையவசதி வந்துவிட்டது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தகுதியானவர்கள் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள். அரசுவேலைக்கு இளைஞர்கள் காத்திருக்காமல் பால்வியாபாரத்தில் இறங்கவேண்டும்.
இவரை அழைத்து பிரதமர் மோடி கடிந்துகொண்ட பின்னரும் சர்ச்சை பேச்சுக்களை தொடர்ந்து விதைக்கிறார் பிப்லப். உதய்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 1913-ம் ஆண்டு ரவிந்திரநாத் தாகூர் தனது நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தார் என்றார்.
ஆனால், தாகூர் அவ்வாறு செய்யவில்லை என்பதால் இதுபெரும் விவாதத்துக்குள்ளாகி உள்ளது. முதல்வரின் முட்டாள்தனம் எல்லைகடந்து வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here