பெயர் வைப்பதில் கணவன் மனைவி தகராறு! குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிபதி!!

கொச்சி: கேரள ஐகோர்ட்டில் கணவன் மனைவி இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது.குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பு வாதிட்டது.
ஆனால், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரே வைக்க வேண்டும் என தந்தை தரப்பு வாதிட்டது.இருவரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இருதரப்பையும் சமாதானப் படுத்தினார்.
பின்னர் குழந்தைக்கு ஜோகன் சச்சின் என்று தானே பெயர் சூட்டினார். தாயார் தரப்பை திருப்தி படுத்த ஜோகன் என்ற பெயரையும், தந்தை தரப்பை திருப்தி படுத்தி ‘சச்சின்’ என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here