ஆட்டோவில் வந்த ரூ.40கோடி! ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்!!

ஆந்திரா: எவ்வித பாதுகாப்பும் இன்றி ரூ.40கோடி பணம் வங்கியில் இருந்து ஆட்டோவில் எடுத்துவரப்பட்டது ஆந்திரமாநிலம் நால்கொண்டாவில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து கிராமின்விகாஸ் வங்கிக்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டது. புதிய 2000, 500, 200, 200 ரூபாய்த்தாள்கள் கட்டுக்கட்டாக ஆட்டோவில் எடுத்துவரப்பட்டன.அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த ஒருவர் இதனைப்பார்த்தார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தார். போலீசார் உடனடியாக அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். வங்கிகளுக்கு இடையே பணம் எடுத்துச்சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.இதுபோன்று பாதுகாப்பு இல்லாமல் பணத்தை எடுத்துச்செல்லக்கூடாது என்று போலீசார் வங்கியாளர்களை எச்சரித்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் வாகனத்தை பாதுகாப்புடன் செல்ல அனுமதி அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here