நடிகையர் திலகம் படத்தில் வரலாற்றுப்பிழை?!

சென்னை: பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை சித்திரம் நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் வெளியாகி உள்ளது.
தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் இப்படம் வெளியாகி உள்ளது.கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாகவே படத்தில் வாழ்ந்துள்ளார்.
துல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனை தூக்கிச்சாப்பிடும் விதமாக அசத்தியுள்ளார்.இப்படத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டு கிடைத்துவரும் வேளையில்,
இப்படத்தில் மோகன்பாபு நடித்துள்ள எஸ்.வி.ரங்காராவ் பாத்திரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது ஒரு பத்திரிகை.

நடிகையர் திலகத்தில் வரலாற்றுப்பிழை ஏற்படலாமா என்று கேட்டுள்ளது அத்தெலுங்கு பத்திரிகை.
மேலும், எஸ்.வி.ரங்காராவ் 1974ஜூலை 18ம் தேதி காலமாகிவிட்டார்.அவர்1980ம் ஆண்டு வசிப்பதாக படத்தின் சம்பவங்கள் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
ரங்காராவுக்கு பதிலாக கும்மடி இடம்பெற்றிருக்க வேண்டுமென்றும் அப்பத்திரிகை பரிந்துரை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here