கர்நாடகா பேரவை தேர்தல்! 222தொகுதிகளில் வாக்குப்பதிவு!!

பெங்களூர்: கர்நாடகமாநிலத்தில் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7மணிக்கு தொடங்குகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
சித்தராமையா அரசின் பதவிக் காலம், இம்மாதம், 28ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, சட்டசபை தேர்தல் மே12ல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஜெயநகர் தொகுதி, பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், மாரடைப்பால் இறந்தார். அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் பிடிபட்டன. எனவே, அத்தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 222 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இத்தேர்தலில் 2,636வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ., சார்பில், 223பேரும், காங்கிரஸ் சார்பில், 221 பேர், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், 200 பேர் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
வாக்கு எந்திரங்கள் ஒப்புகைச்சீட்டு மற்றும் நோட்டா வசதியுடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தயாராக உள்ளன.
பெண்களுக்காக பிங்க் நிற வாக்குச்சாவடிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.இத்தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியமைய வேண்டுமென அக்கட்சிதலைவர்களும், காங்கிரஸ் ஆட்சி தொடரவேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்களும், கிங்மேக்கராக வேண்டுமென்று மஜதவினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் மே.28ல் தேர்தல் நடைபெற்று மே.31ல் முடிவுகள் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here