கோதாவரி நதியில் சென்ற படகில் தீ விபத்து! 120 பயணிகள் பத்திரமாக மீட்பு!!

பாப்பிகொண்டா: பாப்பிகொண்டா ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலம்.இன்று காலை சொகுசு படகு ஒன்றில் 120 பயணிகள் படகில் சென்றனர். வீரவப்பு லங்கா என்ற இடத்தில் செல்லும் போது படகின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.மேலும் இன்ஜின் பகுதி தீ பிடித்து வேகமாக பரவியது. கோதவரி நதி இதனால் புகை மூட்டமாக காட்சியளித்தது. கரையில் இருந்த சுற்றுலா துறையினர் உடனே படகுகளில் சென்று காப்பாற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் சுற்றுலா படகு துறையினருடன் சேர்ந்து 120 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். விசாரணையில் தீ விபத்திற்கு மின் கசிவு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here