செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர்! போலீசார் வழங்கிய நூதன தண்டனை!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி முள்ளுப்பாடியைச் சேர்ந்தவர் முருகானந்தம் 28. பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படும் தனியார் டவுன் பஸ் டிரைவாக உள்ளார்.பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மொபைல் போனில் பேசியபடியே பஸ் ஓட்டியுள்ளார். பஸ்சில் பயணித்த பெண் ஒருவர் அதை செல்போனில் வீடியோ எடுத்து பொள்ளாச்சி, டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்திக்கு, ‘வாட்ஸ் ஆப்’ அனுப்பினார்.இதுகுறித்து விசாரனை நடத்தினார் டிஎஸ்பி. மொபைல் போனில் பேசியவாறு பஸ் ஓட்டியது தவறு என டிரைவர் முருகானந்தம் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு
கேட்டார். இதையடுத்து, டிரைவருக்கு காந்தி சிலை சிக்னலில் டிராபிக் ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதன் படி முருகானந்தம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை டிராபிக்கை ஒழுங்குபடுத்தும் பணியில் முருகானந்தம் ஈடுபட்டார். டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுய டிரைவரின் செயலை வீடியோ எடுத்த பெண் பயணியின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.டிரைவருக்கு அபராதம் விதித்தால் போதாது இது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காக டிரைவருக்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிக்கு உத்தரவிட்டேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here