ஜின்னா மிகச்சிறந்த மனிதர்! பாஜக எம்பி புகழாரம்!!

லக்னோ: முகமது அலி ஜின்னா மிகச்சிறந்த மனிதர் என்று பாஜக எம்.பி. சாவித்ரி பாய் புலே புகழ்ந்து பேசியுள்ளார்.அலிகார் பல்கலைகழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படத்தை அகற்ற வேண்டும் என பிரச்சனை எழுந்துள்ளது.பாஜகவினருக்கும், முஸ்லிம் மாணவர்கள் அமைப்பினருக்கும் இதனால் கடும் மோதல் ஏற்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர், ஜின்னாவின் படத்தை அகற்ற தேவையில்லை என கூறி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்.மும்பை நீதிமன்றம், சபர்மதி ஆஸ்ரமம் உள்ளிட்ட இடங்களில் ஜின்னாவின் படம் இருப்பதை சுட்டிக்காட்டினார். இந்நிலையில், எம்.பி. சாவித்ரி பாய் புலே டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், முகமது அலி ஜின்னா மிகச் சிறந்த மனிதர்.நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். மக்களவையில் ஜின்னாவின் புகைப்படங்களை வைக்க வேண்டும். அவரை மரியாதையுடன் நினைவு
கூற வேண்டும். இவ்வாறு சாவித்ரிபாய் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here