நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டம்!

ஹைதராபாத்:அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்தும், அரை நிர்வாண போராட்டமும் நடத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.                                          சினிமா வாய்ப்பு தருவதாக கூறி சினிமாத்துறையில் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர் என்பதை துணிந்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்.இவரைப்போன்று துணை நடிகை ரோஜா என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
சினிமாத்துறையில் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஸ்ரீசாந்த் ரெட்டி மீது ரோஜா குற்றம் சாட்டினார்.
ஹீரோயின் ஆக்குகிறேன்., திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசைவார்த்தை காட்டி ரோஜாவை பயன்படுத்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

இதுகுறித்து பஞ்சாராஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்க துணை நடிகைகளுடன் சென்றார்.
அப்போது ஸ்ரீசாந்த் தரப்பினரும் அங்கு இருந்தனர். இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.

பின்னர் துணை நடிகைகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஸ்ரீரெட்டியும் பங்கேற்றார். குற்றவாளியை கைதுசெய்யாவிட்டால் பலகட்ட போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here