நடிகர் அமிதாப் ஒரு கோழை! பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு!!

மும்பை:அமிதாப்பச்சன் கோழையாக இருக்கக்கூடாது. சமூகத்தின் அவலங்களை கண்டிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அனைத்து நீதிமன்றங்களிலும் இதுதொடர்பாக விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னணி நடிகரான அமிதாப் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளார்.அவர் இதுபோன்ற சமூக அவலங்களை கண்டிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் கிருஷ்ணபிரசாத், நடிகை பூஜாபட் ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜூம் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

நடிப்பதோடு நடிகரின் பணி முடிந்துவிடவில்லை. சமூகத்தை வழிநடத்துபவராக நடிகர் இருக்கிறார்.
அவர் சமூகசீர்கேடுகள் குறித்து கேள்வி எழுப்பவேண்டும். கோழையாக இருக்க கூடாது. அவர் கோழையாக இருந்தால் சமூகத்தை கோழையாக்கிய தவறை செய்தவராகி விடுகிறார்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here