பெண்கள் தாயாக நடைப்பயிற்சி அவசியம்!

மும்பை: பெண்களுக்கு நடைப்பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் சமீபகாலமாக வலியுறுத்த தொடங்கியுள்ளனர். மாறி வரும் உலகில் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு, கருப்பை நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு சமூக சூழ்நிலைகளும் அவர்கள் கருவுறுவதை பாதிக்கின்றன.கருவுறும் பெண்கள் அதனை கலைப்பதற்கு கவலைப்படுவதே இல்லை. ஆனால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளால் சூழல் ஆகியவற்றால் மீண்டும் கருவுறுதல் தொடந்து தள்ளிப்போய் வருகிறது.
சர்வதேச இனப்பெருக்க மருத்துவ நிபுணர்கள் குழு இதுதொடர்பாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாழ்வியல் சூழ்நிலைகள் பெண்களின் உடல் எடையை அதிகரிக்கின்றன.
இது அவர்கள் தாய் ஆவதை தடுக்கும் காரணிகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. எனவே, பெண்கள் தினமும் 15நிமிடங்கள் காலை, மாலை இருவேளை நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.
உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். வயது, உயரம், உடல்எடை ஆகியவற்றை சமச்சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here