சீருடையில் பிச்சை எடுக்க அனுமதி! காவலர் முதல்வருக்கு கடிதம்!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் காவலராக பணிபுரிந்து வருபவர் த்யானேஸ்வர் அஹிரோ. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.இரண்டு மாதமாக தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை அதனால் தன்னை சீருடையில் பிச்சையெடுக்க அனுமதிக்குமாறு மாநில முதல்வர் ஆளுநர் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் எனது மனைவிக்கு காலில் அடிப்பட்டதால் மார்ச் 20 முதல் 22ம் தேதி வரை அவசர விடுப்பு எடுத்தேன். விடுப்பு குறித்து தொலைபேசியில் அதிகாரிகளுக்குத் தெரிவித்தேன். இரண்டு நாள்களுக்குப் பிறகு பணிக்கு திரும்பினேன். அன்று முதல் இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் எனது குடும்ப செலவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறேன். குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, என்னை சீருடையுடன் பிச்சையெடுக்க அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் தெரிவித்திருந்தார். இக்கடிதத்தால் மும்பை காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here