ஏமனுக்கு சொந்தமான தீவில் படைத்தளம்! சவுதி அரேபியாவுக்கு உதவும் அமெரிக்கா!!

ஏமன்: புரட்சிக்காரர்களை விரட்டியடித்து ஏமனை மீட்போம் என்று கூறிவருகிறது சவுதிஅரேபியா. ஏமனுக்கு சொந்தமான சொகோத்ரா தீவில் படைகளை குவித்து வருகிறது.அத்தீவை சொந்தமாக்கும் விதமாக சவுதி நடந்துகொள்கிறது என்று சர்வதேச சமூகம் குற்றம் சாட்டுகிறது. ஏமனில் இருந்து சுமார் 300கி.மீ.தொலைவில் உள்ள தீவுப்பகுதி சொகோத்ரா.
இத்தீவு 3ஆயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில் அரியவகை விலங்குகள், தாவரங்கள் உள்ளன. அவை பாதுகாக்கப்படவேண்டியவை என்று ஐ.நா. அறிவித்துள்ளது.இருப்பினும், சொகோத்ரா தீவை சொந்தம்கொண்டாடி வருகிறது சவுதிஅரேபியா. ஏமனில் புரட்சியாளர்களை விரட்டியடிக்க வசதியாக அங்கு படைத்தளத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சவுதிக்கு உதவியாக அமெரிக்க படைகளும் ரகசியமாக ஏமனை நோக்கி முன்னேறிவருகின்றன.அமெரிக்க படைகளின் தற்காலிக தங்குமிடமாக சொகோத்ரா தீவு பயன்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. தென் சீனக்கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள நிலையில், சொகோத்ரா தீவில் தனது படைகளை நிறுவுவதால் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என்று அமெரிக்கா நினைத்து காய்களை நகர்த்தி வருகிறது.
அரபுநாடுகள் அமெரிக்காவின் தலைமையை விரும்பி ஏற்றுக்கொண்டு ரகசியமாக செயல்படுகின்றன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here