நதிகள் இணைப்பதே என் கனவு! ரஜினிகாந்த் பேச்சு!!

சென்னை: காலா திரைப்பத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நந்தனம் ஓய்எம்சி மைதானத்தில் நடைபெற்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த கலந்து கொண்டு பேசும் போது இந்நிகழ்ச்சி
காலா ஆடியோ வெளியீட்டு விழா போலவே தெரியவில்லை. படத்தின் வெற்றி விழா போல் உள்ளது.கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணைந்து படம் செய்ய முடிவு செய்து லிங்கா படத்தில் கதை கேட்டேன்தண்ணீர் பஞ்சம் குறித்து கதை இருந்ததால் எனக்கு ஈடுபாடு வந்தது. என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பது தான்.அடுத்தநாளே கண்ணை மூடினாலும் பரவாயில்லை. ரஜினி கதை முடிந்து விட்டது என பேசியவர்களுக்கு மத்தியில் 40 வருஷமாக சாதித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
நானாக ஓடவில்லை. நீங்கள் ஓட வச்சிருக்கீங்க, ஆண்டவன் ஓட வைத்துள்ளான்.
யார் என்ன சொன்னாலும் என் பாதையில் நான் போய் கொண்டு இருப்பேன். காலா படம் அருமையான படமாக இருக்கும். வெற்றி அடையும். காலா அரசியல் படம் அல்ல ஆனால் படத்தில் அரசியல் இருக்கு. நேரம் வரும் போது ஆண்டவன் ஆசீர்வாதத்தினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here