கடனை அடைக்க மகனை அடகு வைத்த விவசாயி தற்கொலை!

மத்தியப்பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயம் செய்ய கடன் வாங்கியிருந்தார்.அசலும், வட்டியும் கட்ட முடியத நிலையில் கடன் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது.கடனை திருப்பிச் செலுத்துமாறு கூட்டுறவு சங்கத்தில் இருந்து நோட்டீஸ் சென்றது. கடனை அடைக்க தனது மகனை அதே ஊரில் உள்ள பண்ணையாரிடம் ஒட்டகம் மேய்ப்பதற்காக அடமானம் வைத்து கடன் பெற்றார். வங்கியில் வாங்கிய கடனை ஓரளவு மட்டுமே கடன் திருப்பிச் செலுத்தினார்.மீதி தொகை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விவசாய கடனை தள்ளபடி செய்ய வேண்டும், அடமானம் வைத்த மகனை மீட்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here