இந்து மாணவி கல்விச்செலவு! முஸ்லிம் சமூகத்தினர் ஏற்றனர்!!

மலப்புரம்: இந்து மாணவியின் கல்விச்செல்வை முஸ்லிம் சமூகத்தினர் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.கேரள மாநிலம், மலப்புரம் வடக்கத்தோடி காலணியைச் சேர்ந்தவர் வி.டி. ரமேஷ். இவரின் மனைவி சாந்தா. இவர்களின் மகள் சத்யவாணி . பிளஸ்2 தேர்வில் 80சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற சத்யவாணி பிஎஸ்சி நர்சிங் சேர்ந்தார்.கடந்த ஏப்ரல் மாதம் ரமேஷ் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதனால் குடும்பம் கடனில் வீழ்ந்தது. இதுகுறித்து புழக்கத்திரி முஸ்லிம் சமூகத்தின் ஜமாத்துக்கு சென்று தனது நிலையை விவரித்தார் சாந்தா.ஜமாத்தில் உள்ளவர்களிடம் சத்யவாணி படிப்புக்காக நிதி திரட்டப்பட்டது. முதல் கட்டமாக ரூ.ஒரு லட்சம் சத்யவாணி குடும்பத்துக்கு அளிக்கப்பட்டது.
மேலும், கணவரின் சிகிச்சைக்காக அடமானம் வைத்திருந்த நிலத்தையும் மீட்டு சாந்தாவிடம் அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here