தேர்வு எழுதிய மணப்பெண்! குவியும் பாரட்டுக்கள்!!

பெங்களூரு: கர்நாடகா மண்டியாவை சேர்ந்தவர் காவியா. தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல்  படித்து வருகிறார்.இவருக்கு லோகித் என்பவருடன் பெற்றோர் திருமணம் நிச்சயித்து தேதி குறிப்பிட்டிருந்தனர்.திருமணம் நடக்கும் அதே தேதியில் தேர்வும் அறிவிக்கப்பட்டது.காவ்யா தேர்வை எழுதிவிட்டு திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் தெரிவித்திருந்தார். மாப்பிள்ளை வீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.இதையடுத்து காலை 9.15 மணிக்கு மணக்கோலத்தில் தேர்வறைக்குச் சென்ற காவியா 11 மணிக்குள் தேர்வை எழுதி விட்டு முகூர்த்தத்தில் கலந்து கொண்டு திருமணமும் செய்துகொண்டார். காவியாவுக்கு உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here