பெண் ராணுவ வீரர் கையில் வளரும் காது!

டெக்சாஸ்:அமெரிக்க பெண் ராணுவ வீரர் கையில் காது வளரும் அதிசயம் நடந்து வருகிறது.
டெக்சாஸை சேர்ந்தவர் ஷமிகா பரேஜ். தரைப்படையில் பணியாற்றி வருகிறார்.2016ல் நடைபெற்ற சாலை விபத்தில் அவரது இடதுகாது துண்டிக்கப்பட்டது.
ராணுவ டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். சிதைந்த காது முழுமையாக வளர அப்பெண் கையில் வைத்து தைத்தனர்.கையில் உள்ள ரத்தக்குழாய்கள் இணைக்கப்பட்ட காதுக்குள் சென்று ரத்த ஓட்டம் கிடைத்தது. இதனால் காது முழுமையாக வளர்ந்தது.
ஒன்றரை ஆண்டுக்குப்பின் அக்காதை கையில் இருந்து பிரித்தெடுத்து ஷமிகாவின் இடதுபக்கம் பொருத்தினர்.தற்போது ஷமிகாவின் கையில் காதுபோன்ற உருவம் வளர்ந்து வருகிறது.
இதனை பார்த்த டாக்டர்கள், ரத்தக்குழாய்கள் ஆபரேஷனுக்குப்பின்னும் குறிப்பிட்ட வடிவத்தில் பாய்வதால் இவ்வாறு தோன்றுகிறது என்று கூறியுள்ளனர்.
சிறு ஆபரேஷன் மூலம் இதனை சரிசெய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here