மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு!

மலேசியா: உலகின் மிக மூத்த பிரதமராக மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் (92)பதவியேற்றுக்கொண்டார்.
மலேசியாவில் ஆளும் கட்சியை கண்டித்து முன்னாள் பிரதமர் மகாதீர் கூட்டணி அமைத்தார்.

அவரது கூட்டணி ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களையும் விட கூடுதலாக 115 இடங்களைப்பெற்று தேர்தலில் வென்றது.
”நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை; நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்” என்று வெற்றிகுறித்து மகாதீர் தெரிவித்தார்.

இன்று மன்னரை சந்தித்தார் மகாதீர். பின்னர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
கோலாலம்பூர் இஸ்தானா நெக்ரா அரண்மனையில் எளிமையாக பதவிப்பிரமாணம் நடந்தது.
பாரம்பரிய உடையில் பதவியேற்க மனைவி சித்தி ஹஸ்மா முகம்மது அலியுடன் வந்தார் மகாதீர்.
மலேசியாவின் ஏழாவது பிரதமராக யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V அவர்களின் முன்னால் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

1981-ஆம் ஆண்டு, தனது 56 வயதில் மகாதிர் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றார்.
22 ஆண்டுகள் பிரதமராக இருந்த பிறகு, 2003-ல் அப்பதவியில் இருந்து விலகினார். பதினைந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், உலகின் மூத்தப் பிரதமர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here