தவான், வில்லியம்சன் ஜோடி அபாரம்! 9விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி!!

டெல்லி: ஐபிஎல் போட்டியின் 42வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ்ஷா மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.டெல்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தொடங்கியது.
பிரித்வி ஷா, ஜேசன் ராய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
பிரித்வி ஷா 9 ரன்னிலும், ஜேசன் ராய் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன்களில் ரன்அவுட் ஆனார்.
4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு துணையாக ஹர்ஷல் பட்டேல் எதிர்முனையில் நிற்க களம் அதிர்ந்தது.56பந்தில் முதல் சதமடித்து கொண்டாடினார் ரிஷப் பந்த். 128ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது டெல்லி அணி.தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ், சிகர் தவான் இறங்கினர்.
அலெக்ஸ் ஹேல்ஸ் 15ரன்களில் அவுட்டானார்.
கேப்டன் வில்லியம்சன் தவானுடன் ஜோடி சேர்ந்து வர்ணஜாலம் காட்டினார்.

18வது ஓவர் முடிவில் தவான் -86, வில்லியம்சன் -78ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
18.5ஓவரில் ஒருவிக்கெட் இழப்புக்கு 191ரன் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி.
9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வென்றது. ப்ளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது சன்ரைசர்ஸ் அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here