நிறம் மாறும் தாஜ்மஹால்! தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்!!

புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் சமீபகாலமாக நிறம் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மங்கி விடாதவாறு பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்சி மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தார்.வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் விசாரித்து
தாஜ்மகாலின் புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ்மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் உள்ளது என கூறி வேதனை அடைந்தனர்.வழக்கு தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் வழக்கு மீண்டும் விசராரணைக்கு வந்தது. யமுனை ஆற்றின் அசுத்த நீரில் உள்ள பூச்சிகளால் தாஜ் மஹால் அரிக்கப்பட்டு பொலிவிழந்ததாக இந்திய தொல்லியல் ஆய்வு துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.இதை கேட்ட நீதிபதிகள் இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் தங்கள் பணியை சரியாக செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நீங்கள் பழியில் இருந்து தப்பித்து கொள்வதில் அக்கறை காட்டுவது கோர்ட்டாரை ஆச்சரியப்படுகிறது. தாஜ் மஹாலின் பராமரிப்பு தொடர்ந்து இந்திய தொல்லியல் ஆய்வு துறையிடம் இருக்க வேண்டுமா என்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.தாஜ் மஹாலை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நிபுணர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் பதில் தெரிவித்திருந்தார். தாஜ்மஹாலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா
வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here