குழந்தை கடத்தல் பீதி! மனநோயாளி அடித்துக்கொலை!!

பழவேற்காடு: குழந்தை கடத்த வந்ததாக கூறி திருவண்ணாமலையில் பொதுமக்களால்
மூதாட்டி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை போல திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்ததாக கூறி மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம நபர்களால் குழந்தைகள் கடத்தப்படுவதாக செய்திகள் பரவியது. அறிமுகமில்லாத நபர்கள், வடமாநிலத்தவர்கள் என சந்தேகப்படும் நபர்களை கண்டால் பொதுமக்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர்.இந்நிலையில் பழவேற்காடு பகுதியில் குழந்தைகளை கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். கண்ணை தோண்டியும், மூக்கை உடைத்தும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இளைஞரின் உடலை மேம்பாலத்தில் கைற்றால் கட்டி தொங்கவிட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் மனநோயாளியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மனநோயாளி எனவும் அதே பகுதியில் கடந்த சில மாதங்களாக சுற்றி திரிந்ததாகவும் அவரை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here