பத்து கழிவறைகள் கொள்ளை!

மகாராஷ்டிரா: ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து கழிவறைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆச்சர்யமும், அதிர்ச்சியும் தரும் இச்சம்பவம் நடந்துள்ளது மராட்டிய மாநிலத்தில்.அம்மாநிலத்தில் உள்ள பிம்ப்ரி நகராட்சியில் நகரும் கழிவறைகள் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டன. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குடிசைப்பகுதிகள், நெடுஞ்சாலை பகுதிகளில் இந்த கழிவறைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
டிராக்டர் டிராலியில் இக்கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை கண்காட்சிகள் நடக்கும் இடங்கள், விழாக்கள் போன்றவற்றுக்கும் அடிக்கடி எடுத்துச்செல்வது வழக்கம். இக்கழிவறைகள் ஏப்ரல் 10ம் தேதியன்று ஒரேநாள் இரவில் கொள்ளையடிக்கப்பட்டன.
அப்பகுதி மக்கள் அதிகாரிகள் திருவிழாவுக்கு எடுத்துச்சென்று இருப்பார்கள். ஓரிரு நாட்களில் திரும்ப வந்துவிடும் என்று காத்திருந்தனர். பத்து நாட்களாகியும் கழிவறைகள் வரவில்லை. எனவே, நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அப்போதுதான் கழிவறைகள் கொள்ளையடிக்கப்பட்ட விபரம் தெரியவந்தது. தற்போது இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here