சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடியாகிறார் நயன்தாரா!

சென்னை: நடிகை நயன்தாரா தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்தார். கதாநாயகிக்கு முக்கித்துவம் தரும் படங்கள் வரவேற்பு பெற்றதையடுத்து கதாநாகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பதாக தெரிவித்திருந்தார்.இதையடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குறையத் தொடங்கியது. தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.அஜித் நடிக்கும் விசுவாசம் பட்த்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அதையடுத்து தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ளார்.சிவகார்த்திகேயன் உடன் நடித்த வேலைக்காரன் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் அவருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here