சவுதி அரேபியா, ஏமன் நாடுகள் பரஸ்பரம் தாக்குதல்!

ஏமன்:சவுதிஅரேபியாவின் விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஏமன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.தற்போது கிளர்ச்சியாளர்கள் பிடியில் ஏமன் அதிபர் மாளிகை வந்துள்ளது.
நேற்றிரவு, அதிபர்மாளிகை உள்ள பகுதியில் சவுதி விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 6பேர் இறந்ததாகவும், இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் சவுதிமீது நடத்தப்பட்டது.
ரியாத் நகரில் இரு தடுப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக செயல்பட்டு ஏமன் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று சவுதிஅரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஜிசான் நகரில் பாதர்1 ரக ஏவுகணைகளால் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினோம்.
தங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் சவுதியின் விமானநிலையம், எண்ணெய்வயல்கள், பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஏமன் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here