சாலை வசதி குறித்து பேசிய ஆசிரியர்! ஓடிச்சென்று மைக்கை ஆப் செய்த அமைச்சர்!!

அசாம்: அசாம் மாநிலம் நகோனில் சுவஜ் பாரத் மிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெயில்வே இணை அமைச்சர் ராஜேன் கோஹெயின் கலந்து நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பேசுகையில் இப்பகுதியில் சாலை வசதிகள் சரியாக இல்லை. அமோலபட்டியின் பிபி சுரங்கப்பாதை சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலைகள் சரி செய்து தருமாறு எம்எல்ஏவுக்கு கோரிக்கை வைத்தும் எதுவும் நடக்கவில்லை என பேசிக்கொண்டிருந்தார்.அவரின் பேச்சை கேட்டு மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ராஜேன் கோஹெயின் இருக்கையில் இருந்து கோபமாக எழுந்து ஆசிரியர் பேசிய மைக்கை ஆப் செய்தார்.சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இதை தெரிவிக்க வேண்டும் என ஆசிரியரை கடிந்து கொண்டார் அமைச்சர். அமைச்சரின் இந்த செயலுக்கு அசாம் அனைத்து மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்தனர். பொதுமக்களும் அமைச்சரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here