நிர்மலாதேவி வீட்டில் கொள்ளை முயற்சி!

அருப்புக்கோட்டை: சர்ச்சை பேரசிரியர் நிர்மலாதேவியின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கல்லூரி மாணவிகளை பாலியல் வலையில் வீழ்த்த முயன்றதாக நிர்மலா தேவி கைதாகி சிறையில் உள்ளார்.அவர் வீட்டில் இருந்து பென் டிரைவ், கம்ப்யூட்டர், செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அருப்புக்கோட்டை காவியன் நகரில் தனியாக வசித்துவந்தார் நிர்மலா.அவர் நீதிமன்ற காவலில் இருப்பதால் வீட்டின் சாவி சகோதரரிடம் இருந்தது.
இன்று காலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உள்ள புத்தக அலமாரி கலைந்து கிடந்துள்ளதாக தெரிகிறது.மர்மநபர் யாரேனும் முக்கிய தடயங்களை எடுத்துச்சென்றார்களா என்பது குறித்து நிர்மலாவிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here