திருமணமான 10வது நாளில் மனைவி வெறிச்செயல்! காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை!!

திருமலை: ஆந்திரா செட்டபடி வலச கிராமத்தை சேர்ந்தவர் கௌரி சங்கர். இவர் தனது அக்கா மகள் சரஸ்வதியை ஏப்ரல் 28ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கௌரிசங்கர் மனைவியுடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.மர்ம நபர்கள் நகையை பறித்துக் கொண்டு கணவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக சரஸ்வதி போலீசாருக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வந்த  எஸ்பி சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினர்.சரஸ்வதி விசாகப்பட்டினத்தில் வேலை பார்த்தபோது சிவா என்பவரை காதலித்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சரஸ்வதியை கௌரிசங்கருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சரஸ்வதி கணவரை கொல்ல சிவாவுடன் திட்டம் தீட்டியுள்ளார்.
சிவா விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரவுடி கோபியுடன் கௌரிசங்கரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி சிவா கோபி
அவரது கூட்டாளி உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here