Connect with us

Sports

மும்பை இந்தியன்ஸ் அபாரவெற்றி!

Published

on

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 41வது லீக்போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் களமிறங்கினர்.யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடினார்.
21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவரும் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.
கொல்கத்தா அணி 211 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கிறிஸ்லின், நரேன் முதலில் களம் இறங்கினர்.
நரேன் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டானார்.10ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6விக்கெட்டுகளை இழந்து 72ரன் மட்டுமே எடுத்திருந்தது.
16ஓவரில் 8விக்கெட்டுகளை இழந்து 103ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்தது கொல்கத்தா அணி.
18.1ஓவரில் 108ரன் எடுத்து அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. 102ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator