ஊருக்குள் பாய்ந்தோடிவரும் எரிமலை குழம்பு!!

ஹவாய்: முப்பது ஆண்டுகளுக்கு பின் கொதித்தெழுந்த எரிமலையில் இருந்து குடியிருப்பு பகுதிநோக்கி எரிமலைக்குழம்பு பாய்ந்தோடி வருகிறது.
ஹவாய் தீவில் உள்ள எரிமலைகளில் ஒன்று கிலயுயா எரிமலை.

அவ்வப்போது நெருப்பை தெறிக்கவிட்டாலும் பெரும்பாலும் அமைதியாக இருந்துவந்தது.
தற்போது திடீரென்று வெடிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சிமையத்தினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

எரிமலையை சுற்றி சுமார் 10கிலோமீட்டர் சுற்றளவு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த 2ஆயிரம்பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கடந்த இரு தினங்களாக 300அடி உயரத்துக்கு எரிமலையில் இருந்து அக்கினி குழம்புகள் சீறி பாய்ந்தன. அவை பொங்கிவழிந்து நகர்ப்பகுதிக்குள் ஆறாக ஓடிவருகின்றன.

சுமார் 20க்கும் மேற்பட்ட வசிப்பிடங்கள் எரிமலைக்குழம்பால் அழிக்கப்பட்டன.
தற்போது எரிமலையில் இருந்து விஷவாயு வெளிவர தொடங்கியுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் சுவாசிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கிலயூயா எரிமலை 1975ம் ஆண்டு பெருத்த சேதம் விளைவித்தது. அதன்பின்னர் 1983ல் பொங்கியது. அதன்பின்னர் தற்போதுதான் அனல்கக்க தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here