ப்ளிப்கார்ட்டை விலைக்கு வாங்கியது! இந்தியாவில்‘ஈ-கடை’விரிக்கும் வால்மார்ட்!!

மும்பை: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் வாங்கியுள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் கைமாறுவதாக கடந்த ஓராண்டாகவே பேச்சு இருந்தது.
இதனை அந்நிறுவனம் மறுத்துவந்தது.இருப்பினும், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ப்ளிப்கார்ட்டை வாங்க ஆர்வம் காட்டிவந்தன.
ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் இடைத்தரகராக செயல்பட்டது.
வால்மார்ட் நிறுவன அதிகாரிகள் சாப்ட்பேங்கை தொடர்புகொண்டனர்.
இருதரப்பும் கடந்த மூன்று மாதங்கள் ஆலோசனை நடத்தினர்.இறுதியாக, 1.47லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 77சதவீதம் ப்ளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட் வாங்க சம்மதித்துள்ளது.
பங்குகள் முழுமையாக கைமாறுவது, ஒப்பந்தங்கள் செய்துமுடிக்க 5மாதங்கள் வரையிலும் எடுத்துக்கொள்ளும்.
இவ்வாண்டு தீபாவளிக்கு ப்ளிப்கார்ட் புதியபெயரில் இயங்க வாய்ப்புள்ளது.வால்மார்ட் நிறுவனம், சர்வதேச அளவில் அமேசானுக்கு போட்டியான நிறுவனம் ஆகும்.
இந்தியாவில் 21 மொத்த விற்பனைமையங்கள் நடத்திவருகிறது.
ப்ளிப்கார்ட்டை வாங்கியுள்ளதால் இந்தியாவின் நகரம், கிராம சந்தைகளை ஒரேநேரத்தில் குறிவைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here